கொரோனா குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!

நேற்று ஒரு நாள் மட்டும் 3,986 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 1,459 பேரும், செங்கல்பட்டில் 390, கோவையில் 332, திருவள்ளூரில் 208, கோவையில் 332, திருவள்ளூரில் 208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-04-08 06:34 GMT

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் 2வது அலை மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.




 


அதே போன்று தமிழகத்திலும் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் 3,986 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 1,459 பேரும், செங்கல்பட்டில் 390, கோவையில் 332, திருவள்ளூரில் 208, கோவையில் 332, திருவள்ளூரில் 208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களில் தினமும் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்க தலைமைச்செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News