தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தடுப்பூசி, பரிசோதனைகளை வேகப்படுத்த வேண்டும்.. பிரதமர் மோடி.!

கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Update: 2021-07-16 14:17 GMT

கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், சில மாநிலங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா ஆகிய 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.


அப்போது, பிரதமர் மோடி பேசும்போது: கடந்த சில நாட்களாக மொத்த தொற்று பாதிப்புகளில் 80 சதவீதம் 6 மாநிலங்களில் இருந்து பதிவாகிறது. அதிகமான பாதிப்புகளை ஏற்படுகின்ற மாநிலங்கள் கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கொரோனா பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்த வேண்டும். கொரோனா அவசர பயன்பாட்டுக்கான நிதி ரூ.23,000 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அந்த நிதியை உரிய முறையில் மாநிலங்களில் பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். முக்கியமாக கிராம புறங்களை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News