காசி விஸ்வநாதர் கோயில் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி பக்தர்களுக்காக திறந்து வைத்தார். அங்கு கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலார்களுடன் பிரதமர் மோடி ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.
இந்நிலையில், விஸ்வநாத வளாக பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு சணலால் செய்யப்பட்ட காலணிகளை பிரதமர் மோடி அனுப்பி வைத்துள்ளார். அதாவது கோயிலில் பணிபுரிபவர்கள் தோல் அல்லது ரப்பர் காலணிகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலான ஊழியர்கள் வெறும் கால்களுடன் இருப்பதை பார்த்த பிரதமர் மோடி அவர்களுக்கு சணலால் உருவான 100 ஜோடி காலணிகளை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த தகவலை கோயில் அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். மேலும், கோயில் பணியாளர்கள் சணல் காலனிகளை அணிந்துள்ளனர். அதில் துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்கள், பூஜை செய்பவர்கள் என அனைவருக்கும் இந்த பரிசுப் பொருட்கள் கிடைத்திருப்பது என்பதை கோயில் அதிகாரி கூறியுள்ளார்.
Source: Maalaimalar
Image Courtesy: Zee News