கேதர்நாத் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி - 3,400 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் தீவிரம்!

கேதர்நாத் சிவன் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை வழிபாடு செய்த பிரதமர் மோடி.

Update: 2022-10-21 12:45 GMT

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கேதர்நாத் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்தார். கோயிலுக்கு செல்லும் போது, அவர் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. புரோகிதர் மந்திரம் கூற தொடர்ந்து பிரதமர் மோடி சிவனை வழிபட்டார். சிவ பூஜையும் நடத்தினார். கோவிலுக்கு வந்த மோடி ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் பாரம்பரிய உடையான சோலா டோரடா அணிந்திருந்தார்.


இதற்கு முன்பு இமாச்சல் பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த பொழுது அப்பொழுது அந்த மாநிலத்தைச் சேர்ந்த சம்பா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் பரிசாக வழங்கிய உடை தான் அது என்பதும் குறிப்பிடத்தக்கது. கேதர்நாத் கோவிலுக்கு மோடியுடன் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் உடன் வந்தார். கேதார்நாத் ரோப் கார் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய மூடி தொடர்ந்து ஆதிகுரு சங்கராச்சாரியார் சமாதிக்கு சென்றார். தொடர்ந்து கோவில் பகுதியில் நடக்கும் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார்.


கௌரிகுண்டு முதல் கேதர்நாத் வரையிலான ஒன்பது புள்ளி 7 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் இரு பகுதிகளுக்கு இடையிலான பயண தூரம் 6 முதல் 7 மணி நேரம் ஆகும் என்ற நிலையில், ரோப் கார் மூலம் வெறும் அரை மணி நேரம் மட்டுமே ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் பொழுது ரூபாய் 3,400 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார் மோடி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News