பிரதமர் பயணத்தை சீர்குலைத்த பஞ்சாப் போலீஸ்: உளவுத்துறை தகவலை நிராகரித்தது ஏன்?
பஞ்சாப் மாநிலம், ஃபெராஸ்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் நேற்று (ஜனவரி 5) பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்தது. பிரதமர் பங்கேற்று ரூ.42,750 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
பஞ்சாப் மாநிலம், ஃபெராஸ்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் நேற்று (ஜனவரி 5) பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்தது. பிரதமர் பங்கேற்று ரூ.42,750 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி விமானம் மூலம் பஞ்சாப் சென்றடைந்து, அங்கிருந்து விழா நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலையால் சாலை மார்க்கமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பிரதமரின் கான்வாய் பதிண்டா என்ற இடத்தின் மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்தபோது பாதியில் தடைப்பட்டு நின்றது. சுமார் 20 நிமிடங்களாக கான்வாய் அப்படியே நின்றது.
அப்போது பிரதமருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாட்டில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது. இதனால் உடனடியாக அனைத்து நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டு, உடனடியாக பிரதமரின் கான்வாய் பதிண்டா விமானம் நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றது. ஒரு நாட்டின் பிரதமர் சென்ற இடத்தில் பாதுகாப்பு குறைபாட்டால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரதமரின் பாதுகாப்பில் ஏன் இவ்வளவு குளறுபடி என்று உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமர் பயணம் செய்யும்போது மத்திய உளவுத்துறை அளித்த தகவல்களை ஏன் பஞ்சாப் போலீசார் பின்பற்றவில்லை என்று உள்துறை அமைச்சகம் கடுமையாக சாடியுள்ளது. ஏற்கனவே பிரதமரின் பயணத்தின்போது போராட்டங்கள் நடத்தப்படலாம் என்ற தகவலையும் உளவுத்துறை பஞ்சாப் போலீசுக்கு அளித்தது. ஆனால் அதனை நிராகரித்துவிட்டு இப்படி கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமரின் பாதுகாப்பில் ஏதேனும் நிகழும் பட்சத்தில் உடனடியாக மாற்று பாதையை பஞ்சாப் போலீசார் தயார் செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு திட்டத்தை அவர்கள் யோசிக்கக் கூட இல்லை. ஒரு பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவலை தெரிவிக்க வேண்டியது மாநில போலீசாரின் கடமையாகும். இதில் அவர்கள் கோட்டைவிட்டது மிகப்பெரிய தவறாகும் என மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
Cource, Image Courtesy: Daily Thanthi