ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை எளிதாக்கும் பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டம் - கூடுதலாக ஒரு கோடி பெண்களுக்கு இலக்கு..!

Pradhan Mantri Ujjwala Yojana-PMUY Ujjwala 2.0: Ujjwala Yojana 2021 aims to benefit lakhs of families from economically weaker backgrounds with clean cooking fuel or LPG gas connections, especially in rural areas.

Update: 2021-08-14 07:08 GMT

india.com

இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை உறுதி செய்யும் வகையில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 10-ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளார். முதல் கட்டத்தில் பலன்களைப் பெறாத ஒரு கோடி பெண்களுக்கு, இரண்டாவது கட்டத்தில் சமையல் எரிவாயு இணைப்புகள் இலவசமாக அளிக்கப்படும்.

சமையலறைகளில் கடுமையாக உழைக்கும் ஏழை பெண்களுக்கு உதவும் வகையில் இலவசமாக சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதே பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் நோக்கமாகும். வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 5 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு பிரதமரின் உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டது.

இதையடுத்து, ஏப்ரல் 2018-இல், பட்டியலின பழங்குடி, பிரதமரின் ஆவாஸ் யோஜனா, அந்தியோதயா அன்ன யோஜனா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தேயிலை தோட்டம், வனப் பகுதிகளில் வசிப்பவர்கள், தீவுகள் உள்ளிட்ட கூடுதலாக ஏழு பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கும் இந்தத் திட்டத்தின் பலன்கள் நீட்டிக்கப்பட்டது. திட்டத்தின் இலக்கு 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த இலக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே எட்டப்பட்டது.

உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், இலவச சமையல் எரிவாயு இணைப்புடன், எரிவாயு அடுப்பும், முதல் மறு நிரப்புதலும் இலவசமாக வழங்கப்படும். எரிவாயு சிலிண்டருக்கான வைப்புத்தொகை, அழுத்த சீராக்கி, குறைந்த அழுத்த நீரியல் குழாய் மற்றும் நிறுவுவதற்கான தொகை உட்பட இலவச சமையல் எரிவாயு இணைப்பிற்கான மதிப்பு ரூ. 1600 ஆகும்.

சமையல் அடுப்பு மற்றும் முதல் மறு நிரப்புதலும் இந்தத் திட்டத்தின் கீழ் இலவசமாக அளிக்கப்படும். பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள், இலவச எரிவாயு இணைப்பைப் பெறுவதற்காக அருகில் உள்ள இண்டேன், பாரத் எரிவாயு அல்லது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எரிவாயு முகவர்களிடம் நேரடியாகவோ அல்லது www.pmuy.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

இலக்குகளுடன் கூடிய வளர்ச்சித் திட்டங்களால், குறிப்பாக பெண்களுக்கான திட்டங்களால் கடந்த ஆண்டுகளில், பெண்களின் வாழ்க்கைத் தரத்தை அரசு உயர்த்தியுள்ளது. நகரங்களில் மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் முன் காலத்தில் பயன்படுத்தப்பட்டன.

விறகுகள், கட்டைகள் போன்றவற்றையே கிராமங்கள் சார்ந்திருந்தன. சமையலறைகள் எப்போதும் இருள் சூழ்ந்த புகையால் நிரம்பி இருந்ததுடன், நுரையீரல் நோய்கள் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் பெண்கள் பாதிக்கப்பட்டனர். வறுமைக்கோட்டிற்குக் கீழ் வசிக்கும் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை உறுதிசெய்யும் பிரதமரின் உஜ்வாலா திட்டம், சுற்றுச்சூழலுக்கு உகந்த சமையல் வேலைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tags:    

Similar News