தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 12 சிறுத்தைகள்: பிரதமர் வரவேற்பு!

குனோ தேசிய பூங்காவிற்கு புதிதாக 12 சிறுத்தைகள் வந்திருப்பதற்கு பிரதமர் வரவேற்பு.

Update: 2023-02-21 05:11 GMT

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென்னாப்பிரிக்கா நாடான நம்பீரியாவில் இருந்து சுமார் 8 சிறுத்தைகள் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டது. அவை தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள குனே வன உயிரின பூங்காவில் விடுபட்டது. இந்நிலையில் மீண்டும் 12 சிறுத்தை புலிகள் தற்பொழுது விமானம் மூலமாக கொண்டு வரப்பட்டது. அந்த சிறுத்தைகள் தற்பொழுது குனோ வன உயிரின பூங்காவில் விடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.


மேலும் சிறுத்தை புலிகள் வருகை தருவதன் மூலம் இந்தியாவில் வன உயிரின பன்முகத்தன்மை ஊக்கம் அளிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியாவில் சிறுத்தை புலிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இத்தகைய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.


குனோ தேசிய பூங்காவிற்கு புதிதாக 12 சிறுத்தைகள் வந்திருப்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி பிரதமர் கூறியிருப்பதாவது, "இந்த முன்னேற்றத்தினால் இந்தியாவின் வன உயிரினங்களின் பன்முகத்தன்மைக்கு உத்வேகம் கிடைத்துள்ளது" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News