பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் 9,000 ஆக அதிகரிப்பு: ஏழை மக்களுக்கு பயன்படும் மருந்துகள் 90% விலை குறைவு!
பிரதமரின் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை இந்தியாவில் 9000 ஆக அதிகரித்து இருக்கிறது.
மத்திய ரசாயசன மற்றும் உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் தற்பொழுது அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் உருவான பிரதமரின் மக்கள் மருந்தகம் ஒன்பதாயிரம் ஆக அதிகரித்து இருக்கிறது. பிற மருந்து கடைகளில் விலையை விட இங்கே 90 சதவீதம் வரை விலை குறைவாக தான் மருந்துகள் விற்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொது மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் உடனடியாக மக்களுக்கு குறைந்த விலையில் கிடைத்து வருகிறது.
அந்த வகையில் அனைவருக்கும் மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமரின் மக்கள் மருந்துகங்கள் மலிவான விலையில் மருந்தகங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 3000 வருடங்கள் திறக்கப்பட்டு இருந்தன. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மொத்தம் 6000 மக்கள் மருந்தகங்களில் விற்பனை நிலையங்கள் இருந்தது. ஆனால் தற்போது அந்த இலக்கை விட ஒன்பதாயிரம் ஆக இந்த இலக்கு அதிகரித்து இருக்கிறது. இந்த மருந்தகங்களில் 1,759 மருந்துகள் மற்றும் 280 அறுவை சிகிச்சை சாதனங்கள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக முன்னணி மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகள் மக்களின் வாங்கும் விலைக்கு ஏற்றவாறு விற்பனை நிர்ணயிக்கப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கு சுமார் 5,300 கோடி அளவிற்கு மருந்து செலவு குறைந்து இருக்கிறது. மேலும் பிரதமரின் மருந்து திட்டம் வடகிழக்கும் மாநிலங்கள், இமயமலை பகுதிகள், தீவுப் பகுதிகள் மற்றும் பின் தாங்கிய மாவட்டங்களில் சேர்ந்த பகுதிகளுக்கும் மக்கள் மருந்தகம திறப்பதற்காக பெண் துணை தொழில் முனைவோர்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்/சி, எஸ்டி அமைப்பை சேர்ந்த பிரிவினருக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது.
Input & Image courtesy: Maalaimalar