வாடஸ்அப் மூலம் போதைப்பொருள் விற்பனை: முஸ்லிம் தம்பதி அதிரடி கைது!

கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் முஸ்லிம் தம்பதிகள் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நிலையில் அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-03-09 01:11 GMT

கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் முஸ்லிம் தம்பதிகள் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நிலையில் அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்திற்கு பெங்களூருவில் இருந்து சொகுசு பேருந்து மூலமாக கொரியர் நிறுவனத்திற்கு பார்சல் மூலமாக போதைப்பொருள் அனுப்பி வைக்கப்படுகிறதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கன்னூர் மாவட்ட போலீசார் சம்மந்தப்பட்ட கொரியர் நிறுவனத்தை மறைந்திருந்து நோட்டமிட்டனர். அப்போது கொரியர் நிறுவனத்திற்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதனை வாங்குவதற்காக முஸ்லிம் தம்பதி வந்துள்ளபோது கையும், களவுமாக போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் கன்னூர் பகுதியில் வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொண்டு போதைப்பொருள் விற்று வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒன்னரை கோடி மதிப்பிலான 2 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவில் அதிகமான மதிப்பிலான போதைப்பொருள் பிடிப்பட்டது இதுதான் என்று போலீசார் கூறுகின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News