அரசியல் தலைவர்கள் செல்வாக்கை பயன்படுத்தக்கூடாது.. தடுப்பூசி விஷயத்தில் முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை.!

அரசியல் தலைவர்கள் செல்வாக்கை பயன்படுத்தக்கூடாது.. தடுப்பூசி விஷயத்தில் முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை.!

Update: 2021-01-12 13:31 GMT

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வருகின்ற 16ம் தேதி போடப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கவுள்ள நிலையில் அரசியல்வாதிகள் வரிசைமுறையை மீறி முண்டியடித்து முன்னால் செல்ல வேண்டாம் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை செய்துள்ளார்.

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார். தடுப்பூசி முன்னுரிமை பட்டியலை தயாரித்துள்ளது, முதற்கட்டமாக தடுப்பூசி இவர்களுக்கு போடப்பட வேண்டும், எந்த அரசியல் தலைவர்களும் கண்டிப்பாக தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி வரிசைமுறையை மீறி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள கூடாது.

அவர்கள் வரிசை முறை வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். முதல் முன்னுரிமை பட்டியலில் ஒரு கோடி மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர். மேலும், கொரோனா பணிகளில் 2 கோடி முன்னிலைப் பணியாளர்கள் உள்ளனர். அதில் காவல்துறையினர், பாதுகாப்பு வீரர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி இலவசமாகப் போடப்படுகிறது.

இதன் பின்னர் 50 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு அடுத்த முன்னுரிமைப் பட்டியலில் உள்ளனர். இதே கட்டத்தில் சர்க்கரை மற்றும் நீண்ட கால நோய் உள்ள 50 வயதுக்கும் கீழ் உள்ளவர்களுக்கு போடப்படும். தடுப்பூசி தொடர்பாக பொய்ச்செய்திகளையும் வதந்திகளையும் யாரும் பரப்ப வேண்டாம் என்று பிரதமர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

பிரதமர் கூறியது சரியானவையே, முதலில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தடுப்பூசி செலுத்துவதுதான் சிறந்த முறையும்கூட.

Similar News