புதுச்சேரியில் பட்டாசு விற்பனையை ஊக்குவிப்பதற்காக 75 சதவீத மானியத்தை வாரி வழங்கிய என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி அரசு !
புதுச்சேரியில் தீபாவளி பட்டாசு விற்பனையை ஊக்குவிப்பதற்காக புதுச்சேரி மாநிலம் பட்டாசுகளின் விற்பனையில் 75 சதவீத மானியத்தை வாரி வழங்கியுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. தீபாவளி காலகட்டத்தில் மாநிலத்தின் பட்டாசு விற்பனையை அதிகரிப்பதற்காக அம்மாநில அரசு 75 சதவீத மானியத்தை வாரி வழங்கியுள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை தடை செய்திருக்கும் நிலையில், புதுச்சேரி மாநில அரசின் இந்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு ஆண்டுகளாக பட்டாசு விற்பனையை தடை செய்தது என்பது குறிப்பிட தக்கது.
தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது குறித்த பிரச்னையில் சில மாநிலங்களின் நிலைப்பாடு என்ன ?
ஒடிசா : ஆளும் பிஜூ ஜனதா தளம் அரசு பட்டாசு விற்பனையை தடை செய்தது. ஆனால் அம் மாநில உயர்நீதிமன்றம் இந்த பிரச்சனையில் தலையிட்டு "பசுமை பட்டாசுகளை வெடிக்க அரசு முன்னெடுக்க வேண்டும்" என்று கூறியதால் அம்மாநில அரசு இது குறித்த ஒரு தெளிவான முடிவுக்கு வரவில்லை.
டெல்லி : டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு பட்டாசு விற்பனைக்கு முழு தடையை விதித்துள்ளது அத்தடை ஜனவரி 1. 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டிஸ்கர் : சத்தீஸ்கர் அரசாங்கம் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.
கர்நாடகம் : கர்நாடகத்தில் பசுமை பட்டாசு தவிர வேறு எந்த பட்டாசும் வெடிக்க அனுமதி அளிக்கவில்லை.