4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் - மத்திய அரசு அதிரடி முயற்சி!
4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைப்பதற்கான முயற்சியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் பெண்கள் பயன்பெறும் வகையில் போஷன் 2.0 என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தியது. இந்துத் திட்டத்தின் மூலமாக எதிர்கால தாய்மார்கள் சத்தான குழந்தைகளுக்கு வளமான வாழ்க்கையில் அளிப்பதற்காக முக்கியமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. நாட்டின் மூல முடுக்குகளில் உள்ள அங்கன்வாடிகளின் மூலமாக வருங்கால தாய்மார்கள் கண்டறியப்பட்டு இந்த திட்டத்தின் மூலமாக வெகுவாக பயன்களை பெற்று உள்ளார்கள். மேலும் அத்தகைய குழந்தைகள் அங்கன்வாடி மையங்களில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கும் ஐந்து வயது வரையான ஊட்டச்சத்து உறுதியை அளிக்க வகையில் பல்வேறு திட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரதமரின் பிறந்த நாள் அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு அங்கன்வாடி தன்னுடைய பெயரில் தத்தெடுத்து அவற்றுக்கு பல்வேறு தேவையான நலத்திட்டங்களையும் செய்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் எனக்கு கீழ் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுக்கும் இதைதான் அவர்கள வலியுறுத்தினார். இத்தகைய அங்கன்வாடிகள் குழந்தைகள் வாழ்வில் பாடுபடும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசாங்கம் புதிய ஒரு முயற்சியும் தற்போது கையில் எடுத்து உள்ளது. அதாவது அங்கன்வாடியில் சுமார் மூலிகை தோட்டங்களை அமைக்கும் பணி தான் அது.
4.37 லட்சம் அங்கன்வாடிகளில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. இது பற்றி வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையங்களிலோ அல்லது அதற்கு அருகாமையில் உள்ள இடங்களிலோ மூலிகை தோட்டம் அமைப்பதற்காக சுமார் 40 இடங்களில் முகாம்கள் நடைபெற்றதாகவும் குறிப்பிட்ட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மூலிகை செடிகள் நடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:Polimer News