பெண்களுக்கு வழங்கும் அதிகாரம் அதுவே முதன்மை பிரதானம்.. நிறைவேற்றிக் காட்டிய மத்திய அரசு..
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.
வீட்டுவசதி என்பது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மனிதர்களின் அடிப்படைத் தேவையாகும். கிராமப்புற வீட்டுவசதிப் பற்றாக்குறையை தீர்ப்பதும், குறிப்பாக ஏழைகளுக்கு தரமான வீட்டுவசதியை மேம்படுத்துவதும் அரசின் வறுமை ஒழிப்பு உத்தியின் ஒரு முக்கியமான அம்சமாகும். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குமிக்க தலைமையின் கீழ் மத்திய அரசு கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மாற்ற அவர்களுக்கு உறுதியான வீடுகளைக் கட்டி வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை 3.04 கோடிக்கும் அதிகமான உறுதியான வீடுகள் கிராமப்புற பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் 75 சதவீதம் எஸ்சி எஸ்டி அல்லது சிறுபான்மை சமுதாயத்தினருக்கு சொந்தமானதாகும்.
மேலும் 10 வீடுகளில் 7 வீடுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ பெண்களுக்கு சொந்தமானதாகும். இந்த நடைமுறை பெண்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலும், வீடுகளில் நிதி சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுப்பதில் அவர்களுக்குள்ள பங்கை வலுப்படுத்துவதிலும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது. கிராமப் புறங்களில் 3 கோடிக்கும் அதிகமான வீடுகள் பிரதமர் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. இந்த வீடுகளில் 70 சதவீதத்திற்கும் மேல் பெண்களுக்கு சொந்தமானதாகும். எனவே இதன் மூலம் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News