கிறிஸ்துமஸ் விழா: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து!

இன்று கிறிஸ்துமஸ் விழாவையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

Update: 2021-12-25 04:25 GMT

உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். இன்று கிறிஸ்துமஸ் விழாவையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசித்து வரும் நமது சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த நல்ல தருணத்தில் நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்க முயல்வோம். இந்த நன்னாளில் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள். சேவை, இரக்கம் மற்றும் பணிவு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்த இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் உன்னதமான போதனைகளை நாம் நினைவு கூருகிறோம். இந்த நன்னாளில் அனைவரும் நலமாகவும், வளமாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Source,Image Courtesy: Twiter


Tags:    

Similar News