உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் அங்குள்ள இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இதற்காக மத்திய அமைச்சர்கள் குழுவையும் உக்ரைன் அண்டை நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதே போன்று உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து இடைவிடாமல் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள பிற நாட்டை சேர்ந்தவர்கள் உயிர் தப்பிக்க பதுங்கு குழிகளில் பதுங்கியுள்ளனர். அதே போன்று இந்தியர்களை மத்திய அரசு சிறப்பு விமானங்களை அனுப்பி பாதுகாப்பாக மீட்டு வருகிறது. அதன்படி இந்தியாவை சேர்ந்த மாணவ, மாணவிகளே ஏராளமாக உக்ரைனில் உள்ளனர். அவர்களை சிறப்பு கவனம் செலுத்தி மத்திய அரசு மீட்கிறது. இதனை பிரதமர் மோடி நேரடியாக கண்காணித்து அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றார்.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது உக்ரைனில் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடியிடம் மாணவர்கள் பகிர்ந்தனர். இதன் பின்னர் அவர்கள் அனைவரிடமும் பிரதமர் மோடியிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Source, Image Courtesy: Dinamalar