மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து !

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தன்னுடைய 57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.;

Update: 2021-10-22 06:33 GMT
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து !

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தன்னுடைய 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழத்து கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: திரு.அமித்ஷா ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் பல ஆண்டுகளாக அமித்ஷா உடன் பணியாற்றியுள்ளேன், கட்சியையும் அரசையும் வலுப்படுத்த அவரது சிறந்த பங்களிப்புகளைக் கண்டுள்ளேன். அவர் தொடர்ந்து அதே ஆர்வத்துடன் தேசத்திற்காக சேவை செய்ய அவருக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளையும் இறைவன் கொடுக்க பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News