வெற்றி தினம்: தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை!

இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக போர் நடைபெற்றது. இந்த போரில் வெற்றி பெற்றத்தை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16ம் தேதி வெற்றி தினம் (விஜய் திவஸ்) கொண்டாடப்படுகிறது. வங்காள தேசம் தனி நாடா இருப்பதற்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க போர் எனவும் கூறலாம்.

Update: 2021-12-16 08:59 GMT

இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக போர் நடைபெற்றது. இந்த போரில் வெற்றி பெற்றத்தை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16ம் தேதி வெற்றி தினம் (விஜய் திவஸ்) கொண்டாடப்படுகிறது. வங்காள தேசம் தனி நாடா இருப்பதற்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க போர் எனவும் கூறலாம்.

கடந்த 1971ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி அன்று வங்காளதேசம் சுதந்திர நாடாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்று முதல் இன்று வரை வங்காளதேசம் இந்தியாவுக்கு நட்பு நாடாக திகழ்ந்து வருகிறது. பயங்கரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான் இன்றுவரை எதிரி நாடாகவே பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்தை ஓடவிட்ட இந்த டிசம்பர் 16ம் தேதியை வங்காளதேசம் சுதந்திர தினமாகவும், இந்தியா அந்த போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றுகின்ற வகையில் வெற்றி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி வெற்றி சுடரை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து வெற்றிச்சுடர் அணையாத விளக்குடன் இணைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source, Image Courtesy: ANI

Tags:    

Similar News