ரூ.400 கோடி மதிப்பில் மருத்துவ கருவி பூங்காக்கள் - தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களில் செயல்படப்போகும் அசத்தல் திட்டம் !
இதன் மூலமாக தரமான மருத்துவ பரிசோதனை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை எளிதில் பெற முடியும்
இந்தியாவை தற்சார்பு நிலைக்கு கொண்டு வரும் முக்கிய நடவடிக்கையாக, வரும் ஆண்டுகளில் மருத்துவ கருவிகள் தயாரிக்கும் தொழிலுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
இது அதிக அளவிலான வேலை வாய்ப்பை உருவாக்கும். மருத்துவ கருவிகள் தயாரிப்பு துறையில் முறையான உள்கட்டமைப்பை உருவாக்க, அதிகளவிலான முதலீடுகள் தேவை என்பதை உணர்ந்து, மருந்துகள் துறை, 'மருத்துவ கருவி பூங்காவை ஊக்குவிக்கும் திட்டத்தை கீழ்கண்ட நோக்கங்களுடன் அறிவித்துள்ளது.
இதன் மூலமாக தரமான மருத்துவ பரிசோதனை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை எளிதில் பெற முடியும். வளங்கள் மற்றும் பொருளாதார அளவுகளை மேம்படுத்துவதன் காரணமாக ஏற்படும் பயன்களை பெற முடியும்.
இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.400 கோடியாகும். இத்திட்டத்தின் காலம் 2020-2021 முதல் 2024-2025ம் நிதியாண்டு வரை என மதிப்பிடப்பட்டுள்ளது.
மதிப்பீடு அடிப்படையில், தமிழகம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இத்திட்டத்தன் கீழ் கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.