ஜம்மு காஷ்மீர் பேரவைக்கு தேர்தல் எப்போது? - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்!

Update: 2022-06-18 10:38 GMT

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றிருந்தார். அதன்படி இன்று ஜம்முவில் நடைபெற்ற மகாராஜா குலாப் சிங் ராஜ்யாபிஷேகம் செய்து கொண்டதன் 200ம் ஆண்டு விழா கொண்டாடத்தில் கலந்து கொண்டார். 


அதன் பின்னர் அவர் பேசியதாவது: ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுவரையறை பணிகள் சமீபத்தில்தான் முடிந்திருப்பதாக சுட்டிக்காட்டினார். இதனால் ஜம்மு பிராந்தியத்தில் 43 தொகுதிகளும் காஷ்மீர் பிராந்தியத்தில் 47 தொகுதிகளும் என்று மொத்தம் 90 தொகுதிகள் மறுவரையறைகள் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தொகுதி மறுவரையறை பணிகள் முடிவடைந்துவிட்டதால் இந்த ஆண்டின் இறுதிக்குள் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்றார். மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும், கில்ஜித் பல்திஸ்தான் பகுதிகளும் மகாராஜா குலாப் சிங்கின் ராஜ்யத்தின் கீழ் இருந்ததாக ராஜ்நாத் சிங் கூறினார். இப்பகுதிகள் இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்ததை நமது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: News 7 Tamil

Image Courtesy: Twitter

Tags:    

Similar News