தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து.. டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அறிமுகம்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியானது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-05-17 06:26 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியானது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் ஐசியு படுக்கை வசதிகள் நிரம்பி வழிவதால், ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் இறக்கும் நிலையும் உருவாகியுள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கொனாரோவுக்கு எதிரான 2டிஜி என்ற மருந்தை தயாரித்துள்ளது.




 


இந்த மருத்து தண்ணீரில் கலந்து உட்கொள்ளும் வகையில் பவுடர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளதால், இந்த மருந்துக்கான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மருந்தானது, கொரோனா நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுவதுடன், ஆக்சிஜனை சார்ந்திருக்க வேண்டிய ஆபத்தான நிலையை குறைக்கிறது என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், அவசரகால தேவைக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.




 




 

இந்நிலையில், டெல்லியில் இன்று மருந்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் அறிமுகம் செய்தனர். முதல்கட்டமாக 10000 மருந்து பாக்கெட்டுகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். தற்போது டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் நாடு முழுவதும் மருந்துகளை அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Similar News