ராமநாதபுரம் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட இயற்கை எரிவாயு குழாய் திட்டம்.. நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.!
ராமநாதபுரம் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட இயற்கை எரிவாயு குழாய் திட்டம்.. நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.!
தமிழகத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். அதே போன்று அடிக்கல் நாட்டியுள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஐஐடி புதிய வாளகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், ரூ.700 கோடியில் ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை குழாய் மூலமாக இயற்கை எரிவாயு கொண்டுவரும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலமாக நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர், தமிழக முதலமைச்சர் மற்றும், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்த திட்டத்தால் நாடு முன்னோக்கி செல்லும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.