800 ஆண்டுகள் பழமையான ராமப்பா கோயில்: மீட்பு பணிகள் தொடக்கம்!
சுமார் 800 ஆண்டுகாலம் பழமையான கோவிலில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஹைதரபாத்தில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் மிகவும் பழமையான ராமர் கோவில் மீட்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 2021 குறிப்பாக இந்த வருடம் தான், இந்த பழமையான கோவில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் குழுவில் இடம்பெற்றுள்ளது. எனவே இதன் காரணமாக இங்கு சுற்றுலாத்துறையும் மிகப்பெரிய வகையில் உயர்ந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. மேலும் பழமையான கோவிலை சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே தற்போது அந்த கோவிலில் மீட்பதற்கான மீட்புப் பணிகள் தொடர்ச்சியான வகையில் நடைபெற்று வருகின்றன. மேலும் மிகவும் பழமையான இந்துக் கோவில்கள் நீண்டகாலத்திற்கு உறுதியாக இருக்குமா? என்பது கேள்வி எழுப்புகிறார்கள் அங்குள்ள அரசியல்வாதிகள். 'பாரம்பரியத்தை விட மக்கள் உயிர் முக்கியம்' என்று இதுபோன்று கருத்தையும் அவர்கள் பதிவிடுகிறார்கள். ஆனால் மீட்பு பணிகளை சரியான வகையில் செய்தால் கட்டிடம் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பானதாக அமையும் என்று மற்றொரு சாரார் பதிலைக் கூறுகிறார்கள்.
மேலும் இதுபற்றி தெலுங்கானா உயர் நீதிமன்றம் ராமப்பா கோவிலை ஒரு விரிவான பாதுகாப்பு மேலாண்மை திட்டத்திற்காக ஐ.நா அமைப்பு வகுத்துள்ள விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யும், அதை கண்காணிக்க முயற்சித்தது. ரியல் எஸ்டேட்டுக்கான முடிவில்லாத தேவையிலிருந்து ஹைதராபாத்தின் பாரம்பரியத்திற்கு ஒரு மாதிரியான பாதுகாப்பை வழங்குவதற்கு நீதித்துறை தற்பொழுது பொறுப்பேற்றுள்ளது.
Input & Image courtesy: The hindu