வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்!

3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்கின்ற மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Update: 2021-12-02 02:41 GMT

3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்கின்ற மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். விவசாயிகள் மேம்படவும், வேளாண் தொழில் சிறந்து விளங்கவும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதனையடுத்து பிரதமர் மோடி ஒரு சிலருக்கு வேளாண் சட்டம் பற்றி புரிய வைக்க தவறிவிட்டோம். இந்த சட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என கூறியிருந்தார். அதனடிப்படையில் கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை அந்த துறையின் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்திருந்தார். இதற்கான குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் மசோதாவை ரத்து செய்வதற்கு ஏராளமான எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர். இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா ஒருமனதா நிறைவேறியது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று (டிசம்பர் 1) ஒப்புதல் வழங்கினார். இதனிடையே 3 புதிய வேளாண் சட்டங்களும் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: India Today


Tags:    

Similar News