கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை: பாதிரியார் விடுதலையை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு!
கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பாதிரியார் பிரான்கோ மூலக்கல் என்பவர் விடுதலை செய்யப்பட்டார். இவரது விடுதலை எதிர்த்து அம்மாநில அரசு தற்போது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது மீண்டும் அந்த வழக்கு சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பேராயராக இருந்தவர் பிரான்கோ மூலக்கல். இவர் மீது கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இந்த புகார் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன் பின்னர் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு பாதிரியார் மூலக்கல் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் ஜாமீன்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் பாதிரியார். அவருக்கு ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து மீண்டும் வெளியில் வந்தார். அது மட்டுமின்றி அவர் மீதான வழக்கு கோட்டயத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கடந்த ஜனவரி மாதம் வழங்கிய தீர்ப்பில் பாதிரியார் மூலக்கல்லுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டார். இந்த தீர்ப்புக்கு கன்னியாஸ்திரி மட்டுமின்றி ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் கண்டனங்கள் எழுந்தது. இதனிடையே நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரள அரசும், கன்னியாஸ்திரியும் மேல்முறையீடு செய்துள்ளனர். இதனால் மீண்டும் பாலியல் வழக்கு சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai