நல்ல வேளை இதை நாங்கள் முன்பே செய்யவில்லை - ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்!

கடன்களுக்கான வட்டியை உயர்த்தி இருந்தால் பொருளாதாரம் முற்றிலும் சரிவடைந்து இருக்கும் அதை நாங்கள் செய்யவில்லை என்று RBI கவர்னர் தகவல்.

Update: 2022-11-03 12:32 GMT

இந்திய பொருளாதாரம் தற்பொழுது தான் மீண்டும் ஒரு முன்னேற்றமான நிலைமைக்கு அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மக்கள் தற்பொழுது பொருளாதாரத்தின் தாக்குதல் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள். அரசாங்கமும் இந்திய மதிப்பில் நடவடிக்கைகள் மற்றும் பண கட்டுப்பாடு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தாமல் அரசு இருந்து வருகிறது.


இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், இது பற்றி கூறியிருக்கிறார். குறிப்பாக உக்கரை மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு முன்பு பண விகிதம் 4.3 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தது. ஆனால் போர்த்து தொடங்கியதுடன் கணிப்புகள் எல்லாம் போய் விட்டனர். விலைவாசி உயர்ந்த பணவீக்கம் அதிகரித்துவிட்டன. அதனால் பணவீக்கத்தை 6 சதவீதத்திற்குள் குறைப்பது என்ற இலக்கை ரிசர்வ் வங்கி தவறி தவறவிட்டு விட்டதும் உண்மைதான்.


பணம் வீக்கத்தை குறைக்க கடந்த மே மாதத்தில் இருந்து தொடங்கினோம். ஆனால் இன்னும் முன்கூட்டியே கடன் காலவட்டியை உயர்த்து இருந்தால் பொருளாதாரம் முற்றிலும் சரிவு பாதையை நோக்கி திரும்பி இருக்கும். நாங்கள் பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும். அதை தற்போது தவிர்த்து இருக்கிறோம். பணவீக்கம் தற்போது கட்டிற்குள் இருக்கிறது. சிலரை பரிமாற்றத்திற்கான டிஜிட்டல் கரன்சி இந்த மாதத்தில் வெளியிடப்படும். ஏற்கனவே டிஜிட்டல் கரன்சியை நவம்பர் ஒன்றாம் தேதியே ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News