ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ரெடி.. தேர்தல் ஆணையம்.!
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ரெடி.. தேர்தல் ஆணையம்.!
தேவையான சட்ட திருத்தங்கள் செய்தால் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த, தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார்.
நாடு முழுதும் உள்ள மாநிலங்களில் சட்டசபை தேர்தல், இடைத்தேர்தல் என வருடந்தோறும் தேர்தல் நடந்துக் கொண்டேயிருக்கும். பிரதமர் மோடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், அடிக்கடி தேர்தல்கள் நடப்பதால், நாட்டின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கிறது. இதனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு விரும்புகிறது என்றார்.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பிரதமரின் திட்டத்தை தேர்தல் ஆணையம் ஏற்கிறது. தேவையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவும், தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.
கொரோனா பரவலால், தேர்தல் பணிகள் பாதிக்க கூடாது என்பதில், தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. அதனால் தான் கொரோனா தடுப்பு நடவடிக்கைளுடன் பீகார் சட்டசபை மற்றும் பல்வேறு மாநிலங்களில், 59 தொகுதிகளில் இடைத்தேர்தல்களை, தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு வேளை இந்தியாவில் ஒரே தேர்தல் நடந்தால், மக்களுக்கும் சிரமம் இருக்காது. உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என மக்களுக்கு மாற்றி மாற்றி வருவதால் சிரமத்திற்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரே தேர்தல் நடந்தால் நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்லதுதான்.