கச்சா எண்ணெய் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம் - மத்திய அரசு!

Update: 2022-06-30 11:29 GMT

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று (ஜூன் 29) நடைபெற்றது. மேலும், நாடு முழுவதும் 63 ஆயிரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களை கணினிமயமாக்க இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் சுமார் 13 கோடி சிறிய மற்றும் ஏழை விவசாயிகள் பலன் அடைவார்கள் என்று மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

இந்நிலையில், முற்றிலும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்ற கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவது என்று பொருளாதா விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு சந்தை சுதந்திரத்தை அளிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் உற்பத்தி பகிர்வு ஒப்பந்தங்களில் அரசுக்கோ, அரசால் நியமிக்கப்படுவோருக்கோ அரசு நிறுவனங்களுக்கோ கச்சா எண்ணெய் விற்பனை செய்வதற்கான நிபந்தனைகள் தள்ளுபடி செய்யப்படும். இதனால் அனைத்து விதமான ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் கச்சா எண்ணெயை உள்நாட்டு சந்தையில் விற்பதற்கு முடியும் என மத்திய அறிக்கையில் கூறியுள்ளது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News