மகாராஷ்டிரா: ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ரூ.100 கோடி கறுப்பு பணம் !
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் 100 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை வருமான வரித்துறையினர் கண்டுப்பிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் 100 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை வருமான வரித்துறையினர் கண்டுப்பிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பு அளவுக்கு கறுப்பு பணம் சிக்கியதுடன், 23.45 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரிய அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாசிக்கில் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் வரி மோசடியில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. அந்த நிறுவனத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் கறுப்பு பணம் கிடைக்கப்பெற்றுள்ளது. அது மட்டுமின்றி 2.45 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளது. அதிகமான நிலம் வாங்குவதற்காக கணக்கில் வராத வருமானத்தை முதலீடு செய்த சில முக்கிய நபர்களும் சிக்கியுள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar