ரூ.2000 நோட்டுகள் மாற்றம்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை!
ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதுடன் அதனை வங்கிகளில் கொடுதது மாற்றம் செய்து கொள்வதற்கு மே 23 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தது.
ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதுடன் அதனை வங்கிகளில் கொடுதது மாற்றம் செய்து கொள்வதற்கு மே 23 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தது
அதன்படி நாளை 23ம் தேதி வருகிறது. இதனால் ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே மாற்ற முடியும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ரூ.2000 நோட்டுகளை மாற்ற வரும் பொதுமக்களுக்கு போதிய வசதிகளை செய்து தரவேண்டும். குடிநீர் மற்றும் இருக்கை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் பொதுமக்கள் மாற்றும் ரூ.2000 நோட்டுகளுக்கான தரவை தினமும் கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் எளிதில் நோட்டுகளை மாற்றுவதற்காக தனி கவுண்டர் வசதியும் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.