சர்க்கரை ஏற்றுமதிக்கு ரூ.3500 கோடி மானியம்.. 5 கோடி விவசாயிகள் பயனடைவர்.!

சர்க்கரை ஏற்றுமதிக்கு ரூ.3500 கோடி மானியம்.. 5 கோடி விவசாயிகள் பயனடைவர்.!

Update: 2020-12-16 17:55 GMT

சர்க்கரை ஏற்றுமதிக்கு ரூ.3500 கோடி மானியம் அளிப்பதாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகையை அகற்ற உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.3,500 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒரு டன்னுக்கு 6,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும், இதன் மூலம் 5 கோடி விவசாயிகளும், சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 5 லட்சம் தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மானியங்கள் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Similar News