ஆர்டிஜிஎஸ் சேவை: ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய உத்தரவு.!

தொழில்நுட்ப ரீதியிலான மேம்பாட்டு பணிகள் நடைபெறவிருப்பதால், வருகின்ற ஞாயிறு அன்று நள்ளிரவு 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை சேவைகள் நடைபெறாது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2021-04-13 03:19 GMT

வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி கிட்டத்தட்ட 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் சேவை பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனை மட்டுமே ஆர்டிஜிஎஸ் முறையில் செயல்படுத்த முடியும்.




 


இதனிடையே தொழில்நுட்ப ரீதியிலான மேம்பாட்டு பணிகள் நடைபெறவிருப்பதால், வருகின்ற ஞாயிறு அன்று நள்ளிரவு 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை சேவைகள் நடைபெறாது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் முன்னதாகவே தெரிவிக்கப்பட்டு, பரிவர்த்தனையை திட்டமிட வங்கிகள் தெரிவிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவுரை கூறியுள்ளது.

Similar News