ஜல் ஜீவன் திட்டம்: குழாய் நீர் உள்ள கிராமப்புற குடும்பங்கள் 55% வரை உயர்வு!
ஜல் ஜீவன் திட்டம் 7.5 கோடி வீடுகளை எட்டியதால், குழாய் நீர் உள்ள கிராமப்புற குடும்பங்கள் 17% முதல் 55% வரை உயர்வு.
அனைவருக்கும் தரமான குடிநீர் கிடைக்க திட்டமிட்டு பணியாற்றுவது மாநில அரசின் கடமை என்று போதிலும், மாநில அரசின் செயல்பாட்டுக்கு துணை நிற்கும் வகையில், மத்திய அரசு தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில், 2024-ஆம் ஆண்டுக்குள் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து ஜல் ஜீவன் இயக்கத்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமல்படுத்தியது.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை, கிராமப்புறங்களில் 7.48 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 19.36 கோடி கிராம வீடுகளில், 13.12.2022 வரை 10.71 கோடி வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், இதுவரை 1 கோடியே 25 லட்சம் வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார். பணியை செயல்படுத்துவதில் மாநிலங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கும், பணியை விரைவுபடுத்த தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் அவற்றைக் கையாள்வதற்கும், தேசிய ஜல் ஜீவன் மிஷனின் குழுக்களால் அவ்வப்போது ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Input & Image courtesy: Swarajya News