வான் எல்லை மூடப்பட்டால் என்ன? உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை தரை வழியே எல்லை கடத்தும் இந்தியா - பிரம்மிக்கும் உலக நாடுகள்!

russia-ukraine-latest-updates-to-evacuate-indians-from-ukraine-mea-teams-from-4-countries

Update: 2022-02-25 07:40 GMT

உக்ரைன் நாடு போர்க்காரணமாக  வான்வெளியை தடைசெய்துள்ளது. இதனால் மீட்பு விமானங்கள் அங்கு சென்றாலும் தரையிறங்க முடியாது. இந்த சூழலை சாதுர் யமாக எதிர்கொள்ளும் இந்திய வெளிவிவகாரத்துரை அமைச்சகம், உக்ரைனில் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களை வெளியேற்றுவதற்கு உதவுவதற்காக நான்கு நாடுகளிடம் உதவி கோரியுள்ளது. 

உக்ரைன் நாட்டுடன் நில எல்லைகளை பகிரும் ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக் குடியரசு மற்றும் ருமேனியா நாட்டுக்கு குழுக்களை அனுப்புகிறது. உக்ரைன் நாட்டின் மேற்கு எல்லையில் இவை எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அதே நேரத்தில் ரஷ்யா கிழக்குப் பக்கத்திலிருந்து தாக்குகிறது. வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்த நான்கு நாடுகளுடன் பேசியதாக ட்வீட் செய்துள்ளார்.

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மேற்கு எல்லைக்கு வர வைத்து நில எல்லை மூலமாக மீட்டு இந்தியா அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். இந்திய விமானப்படை விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், அவற்றை வெளியேற்றுவதற்கு சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார்.

இந்த எல்லைப் புள்ளிகளுக்கு அருகில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் இந்த குழுக்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


உக்ரைனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள

உதவி எண் : +91 9940256444 / +91 9600023645, 044-2851 5288

மின்னஞ்சல் : nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com

வலைதளம் : https://nrtamils.tn.gov.in

Facebook : https://www.facebook.com/nrtchennai1038

Twitter : @tamiliansNRT

மத்திய வெளியுறவுத்துறை உதவி எண்கள்:

1800118797 (Toll free)

+91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905

மின்னஞ்சல்: situationroom@mea.gov.in

Tags:    

Similar News