உக்ரைனில் இருந்து எத்தனை இந்தியர்கள் மீட்பு: மத்திய அரசு பரபரப்பு தகவல்!

Update: 2022-03-06 10:11 GMT

உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு ருமேனியா மற்றும் ஹங்கேரி வழியாக இரண்டு விமானங்களில் 393 மாணவர்கள் இன்று காலை இந்தியா திரும்பினர்.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி கூறியதாவது: உக்ரைனில் இருந்து இதுவரை 13,300 பேர் பாதுகாப்புடன் மீட்டு தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளனர். மேலும், 2000க்கும் மேற்பட்டோர் உக்ரைனை விட்டு வெளியேற்றி அண்டை நாடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 15 விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அதில் நேபாளம் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்தவரும் அடங்குவர்.

மேலும், சில இடங்களில்தான் பிரச்சனை நிலவுகிறது. எனவே போரை நிறுத்துவதற்கு இரண்டு தரப்பையும் கேட்டுக்கொண்டுள்ளோம். அதே சமயம் சுமியில் உள்ள மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இந்திய அரசு மீட்டு கிழக்கு நோக்கி நகர்த்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News