இந்தியா, ரஷ்யா உச்சி மாநாடு : அதிபர் புதின் டெல்லி வருகை! என்னென்ன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது?

இந்தியா, ரஷ்யா உச்சி மாநாடு டெல்லியில் இன்று (டிசம்பர் 06) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டெல்லி வருகைதர உள்ளார்.

Update: 2021-12-06 02:05 GMT

இந்தியா, ரஷ்யா உச்சி மாநாடு டெல்லியில் இன்று (டிசம்பர் 06) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டெல்லி வருகைதர உள்ளார். விமான நிலையத்திற்கு வருகை தரும் அவர் நேராக மாநாடு நடைபெற உள்ள ஐதராபாத் இல்லத்துக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி அவரை வரவேற்று அழைத்து செல்கிறார்.

இதன் பின்னர் இரண்டு நாட்டு தலைவர்களும், தங்கள் நாட்டு உயர் அதிகாரி குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதில் இந்தியா, ரஷ்யா நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு அமைச்சர்களும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பிரதமர் மோடி மற்றும் அதிபர் புதின் இடையில் நேரடியான சந்திப்பு நடைபெறுகிறது.

இந்தியாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் சுமார் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. இதில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கூட்டறிக்கை வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் புதின் வருகையொட்டி விமான நிலையம் முதல் அவர் மாநாட்டுக்கு செல்லும் ஐதராபாத் இல்லம் வரை போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Source: Daily Thanthi

Image Courtesy: The Indian Express


Tags:    

Similar News