பிரதமர் மோடி பற்றி வெறுப்புணர்வு பேச்சு: சமாஜ்வாடி கட்சித் தலைவருக்கு 3 ஆண்டு சிறை!
பிரதமர் நரேந்திர மோடி பற்றி வெறுப்புணர்வு பேச்சு காரணமாக சமாஜ்வாடி கட்சித் தலைவருக்கு 3 ஆண்டு சிறை விதித்த உத்தர பிரதேச நீதிமன்றம்.
வெறுப்புணர்வு பேச்சு:
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான். இவர் உத்தரபிரதேச சட்டசபையில் ராம்பூர் தொகுதி உறுப்பினராக இருக்கிறார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது உத்திரபிரதேச மாநிலம் கோர்டு வாலி பகுதியில் கலந்து கொண்டு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மீது வெறுப்புணர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். இது தொடர்பாக புகார் ஒன்றும் எழுந்து இருக்கிறது.
அவர் மீது பாய்ந்த சட்டம்:
இதில் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153(A) மற்றும் 505 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 125 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ராம்பூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ., எம்.பி., மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தனிக்கோட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவில் அசாம் கான் மீதான மூன்று பிரிவுகளின் கீழான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை:
இதன் காரணமாக மூன்று ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த நேற்று உத்தர பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக அவருக்கு ஜாமின் வழங்கியும் கோர்ட் உத்தரவிட்டது. இந்த அதிரடி தீர்ப்பு காரணமாக உத்தரபிரதேச மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படத்தில் இருக்கிறது.
Input & Image courtesy: News