BREAKING : ட்ரோன்களை கண்டால் சுட்டு வீழ்த்த பாதுகாப்புப் படைக்கு உத்தரவு !
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தில், ட்ரோன் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படை மிகத்தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
உரிய முறையிலான தொழில்நுட்ப சாதனம் கண்டுபிடிக்கப்படும் வரை ரப்பர் புல்லட்டால் 'ட்ரோன்களை' சுட்டு வீழ்த்தும்படி பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள், ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதை பார்க்க முடிகிறது.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தில், ட்ரோன் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படை மிகத்தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், முக்கிய கட்டுமானங்கள், விமான நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்கள் அருகாமையில் ட்ரோன்கள் பறந்தால் அதனை ரப்பர் புல்லட்டால் சுட்டு வீழ்த்த பாதுகாப்பு படையினருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்களை எதிர்கொள்ள உரிய வசதிகளுடன் கூடிய தொழில்நுட்ப சாதனம் நமது நாட்டில் கண்டுப்பிடிக்கப்படும் வரை இந்த துப்பாக்கியை பயன்படுத்த பாதுகாப்பு படைக்கு உத்தரவுவிடப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar