சிங்கு எல்லை: காவல்துறையைக் கத்தியால் மற்றும் கற்களால் தாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்.!

சிங்கு எல்லை: காவல்துறையைக் கத்தியால் மற்றும் கற்களால் தாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்.!

Update: 2021-01-29 18:17 GMT
குடியரசு தினத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தேசியக் கொடியை இழிவு படுத்திய சில நாட்களுக்குப் பிறகு டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சிங்கு எல்லையில் உள்ள உள்ளூர் வாசிகளுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியைச் சுற்றியுள்ள பல்வேறு எல்லையில் முகாமிட்டு உள்ளனர். 
வெளியிடப்பட்ட வீடியோவில் ஒன்றில் உள்ளூர் வாசிகள் போராட்டக்காரர்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி வேறு இடங்களுக்குச் செல்லுமாறு கோஷமிட்டனர். மற்றொரு வீடியோவில் காவல்துறையினர் உள்ளூர் வாசிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதற்கிடையில் விவசாயிகள் உள்ளூர் வாசிகள் மற்றும் காவல்துறை மீது கற்களை எறிந்தனர். இதனால் உள்ளூர் வாசிகள் மற்றும் விவசாய போராட்டம் நடத்துபவர்களுக்கு வன்முறை கிளம்பியது, அதனை காவல்துறை நடுவில் சென்று இருவரையும் தடுக்க முயன்றனர். 

இறுதியாகச் சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியது. இதற்கிடையில் அலிப்பூர் காவல் நிலையத்தின் SHO ஆர்ப்பாட்டக்காரர்கள் கத்தியால் தாக்கப்பட்டார். மேலும் பல காவல்துறையினர் கல் வீச்சியில் பலத்த காயமடைந்தனர். கத்தியால் தாக்கப்பட்ட SHO அதிகாரி பிரதீப் பழுவால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

செங்கோட்டையில் நடந்த கலவரத்திற்கு பிறகே அவர்களை அப்புறப்படுத்தக் கூறியதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக உள்ளூர் வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போராட்டத்தால் டெல்லியில் போக்குவரத்து நெரிசல்கள், பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 
மேலும் தற்போது வைரலாகி வரும் வீடியோவில் BKU தலைவர் ராகேஷ் தீக்சைட்  தனது ஆதரவாளர்கள் மற்றும் போராட்டக்காரர்களை டிராக்டர் பேரணியில் ஆயுதங்களை ஏந்துமாறு கேட்டுக்கொண்டதைக் காணலாம். டெல்லியில் வன்முறை தொடர்வதற்கான முக்கிய காரணம் ராகேஷ் தீக்சைட் ஒருவரும் ஆவார். 

Similar News