இனி தயவு தாட்சண்யமே கிடையாது: பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய ஆறு அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய பரிந்துரை..!

Six Jammu And Kashmir Govt Employees To Be Sacked For Terror Links

Update: 2021-09-23 00:30 GMT

J&K LG Manoj Sinha (Source: News18)

ஜம்மு -காஷ்மீர் அரசு ஊழியர்களின் விவரங்களை சரிபார்க்க நியமிக்கப்பட்ட குழு, புதன்கிழமை (22 செப்டம்பர்) பயங்கரவாத குழுவுடன்  தொடர்புடைய ஆறு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய பரிந்துரைத்தது.

பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பு காரணமாக அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மாநில அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஊழியர்கள், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின், அடிமட்ட நிலை பணியாளர்களாக இருந்து வந்துள்ளனர். மறைமுகமாக தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டு வந்ததால் பணிநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. 

2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு பின்னர், இது வரை பதினோரு அரசு ஊழியர்கள் பயங்கரவாத தொடர்புகள் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். பதவி நீக்கம் செய்வதற்கான பரிந்துரைகள் அரசியலமைப்பின் தொடர்புடைய விதிகளின் கீழ் குழுவால் செய்யப்பட்டன.

இந்த ஆண்டு ஜூலை மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் முசாஃபராபாத்தை தலைமையிடமாக கொண்ட 'ஜெஹத் கவுன்சிலின்' தலைவர் சையத் சலாவுதீனின் இரண்டு மகன்களும் அடங்குவர். இது பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் கூட்டமைப்பாகும்.

முன்னதாக மே மாதத்தில், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக மூன்று அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

Tags:    

Similar News