'ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி.!

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலையின் தாக்கத்தை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Update: 2021-06-05 04:00 GMT

ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலையின் தாக்கத்தை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.




 


இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் போடப்படுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே தடுப்பூசி அனைவருக்கும் வேகமாக போடுவதற்கு மத்திய அரசு ரஷ்யா தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.


 



இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சீரம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து புனேவில் உள்ள அட்டாஸ்ஃபர் மையத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது. விரைவில் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News