மகிழ்ச்சி தகவல் ! ஸ்புட்னிக்-V தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிக்க புதிய ஒப்பந்தம் !
உற்பத்தி எண்ணிக்கையை அதிகரிக்க புதிய ஒப்பந்தத்தை உருவாக்கிய ஸ்புட்னிக்-V தடுப்பூசி நிறுவனம்.
இந்தியாவில் இந்த பெரும் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் மிகவும் திறமையாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. குறிப்பாக தொடர்ச்சியாக இந்தியாவில் செலுத்தப்பட்டு வரும் மூன்று நிறுவனங்களின் தடுப்பூசி மக்களுக்கு பரவலாக போடப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களில் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தினால் தடுப்பூசிகளின் உற்பத்தி எண்ணிக்கையைக் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அந்த வகையில் தற்பொழுது ரஷ்யா நாட்டின் தயாரிப்புமான ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு இந்தியாவில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்தியாவில் இதை உற்பத்தி செய்ய பல்வேறு நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இதில் தற்போது டில்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பனாசியா பயோடெக் நிறுவனமும் 2.5 கோடி தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க ரஷியாவின் ஜெனரியம் நிறுவனம், இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தடுப்பூசி உற்பத்தி எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஒப்பந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அதன் படி ஜெனரியம் நிறுவனம் தயாரித்துள்ள மருந்து பொருளை கொண்டு இந்த தடுப்பூசியை பனாசியா பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்யும். அவற்றை நாடு முழுவதும் வினியோகிப்பதற்காக டாக்டர் ரெட்டி ஆய்வகத்துக்கு உரிமை வழங்கும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக் V தடுப்பூசி இந்த மாத இறுதிக்குள் அதிகமாகக் கிடைக்கும் நிலை உருவாகும் என்று தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.
Image courtesy: times of India