சிறிது நேரத்தில் குலைநடுங்கிப்போன பாகிஸ்தான் - எல்லை தாண்டி பறந்த இந்திய சூப்பர் சோனிக் ஏவுகணை - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!
Statement on accidental firing of missile
வழக்கமான பராமரிப்புப் பணியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஏவுகணை ஒன்று நுழைந்ததை இந்தியா வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது. இது பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
மார்ச் 9, 2022 அன்று, வழக்கமான பராமரிப்பின் போது, தொழில்நுட்பக் கோளாறால் ஏவுகணை தற்செயலாக செலுத்தப்பட்டது. இது குறித்து இந்திய அரசு தீவிரமான உயர்மட்ட நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது" என்று பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏவுகணை பாகிஸ்தானின் ஒரு பகுதியில் தரையிறங்கியது. இது எந்த ஏவுகணை என்பதை பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை என்றாலும், இது பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை என்று பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
400 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய இந்த ஏவுகணை அதிக சக்தி வாய்ந்தது. ஏவுகணை அமைப்பு சிறப்பு டிரக்குகளில் இருந்து இயக்கப்படுகிறது. அதனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தலாம். இத்தகைய ஏவுகணைச் சோதனைகள் பொதுவாக கிழக்குப் பகுதியிலும் அந்தமான் நிக்கோபார் பகுதியிலும் நடக்கும்.