ராமாயணத்தை கேலி செய்த செயின்ட் மேரி பள்ளி- வளாகத்தில் ராமசரிதை பாடும் இந்துக்கள் !
இந்துக்கள் 'ராம்சரித்மனாஸ்' மந்திரங்களை அந்த பள்ளிக்கு வெளியே அமர்ந்து அமைதியான முறையில் ஓதி தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தனர்.;
ஹரியானாவைச் சேர்ந்த செயின்ட் மேரி பப்ளிக் பள்ளி வளாகத்தில் அதன் மாணவர்கள் ராமாயணத்தை கேலி செய்து வெளியிட்ட ஒரு ஸ்கிட் (skit) சமீபத்தில் சமூக ஊடகங்களில் வீடியோ கிளிப்களாக வைரலாகி பெரும் கண்டனங்களுக்கு ஆளானது. இது ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளி என்பது பலருக்கும் ஆத்திரத்தை வரவழைத்தது.
இந்த கேலிக்கூத்து பகவான் ஸ்ரீ ராமரை ஒரு டிமென்சியா (மறதி) நோயாளியாக காட்டி கேலி செய்தது. ஆன்மீகம் மற்றும் கலாச்சார பெருமையை தூண்டுவதற்கு பதிலாக இந்த ஸ்பீட் ராமாயணத்தை கேலி செய்வதில் முடிந்தது. சமூக ஊடகங்களில் ஏற்பட்ட சீற்றத்தை தொடர்ந்து செயின்ட் மேரிஸ் பப்ளிக் பள்ளி நிர்வாகம் இதற்கு மன்னிப்பு கோரியது.
"எங்கள் மாணவர்களில் சிலர் நடத்திய ராம்லீலா ஸ்கிட் எந்த ஒரு தனிநபரின் மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காது என்று உறுதி அளிக்கிறோம்" என்று இது குறித்து பள்ளி முதல்வர் ராஜீவ் சர்மா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன்னதாக பஜ்ரங் தளத்தை சேர்ந்த இந்து ஆர்வலர்களும் பள்ளிக்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த மன்னிப்பு வெளியான சில நாட்களுக்குப் பிறகு, இந்துக்கள் 'ராம்சரித்மனாஸ்' மந்திரங்களை அந்த பள்ளிக்கு வெளியே அமர்ந்து அமைதியான முறையில் ஓதி தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த நிகழ்வின் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பிரபல ட்விட்டர் பயனர், "ராமாயணத்தை கேலி செய்த சென்மேரிஸ் பள்ளிக்கு இந்துக்கள் மிகவும் நல்ல முறையில் பதில் அளித்து உள்ளதாக" தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவில் சென்மேரிஸ் பள்ளியின் வாயிலுக்கு வெளியே இந்துக்கள் அமர்ந்து ராம்சரித்மனாஸ் மந்திரங்களை ஓதுவதைக் காணலாம். இந்த வீடியோவில் நீண்ட பதிப்பு மற்றொரு ட்விட்டர் பயனரால் திங்கட்கிழமை அன்றே பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இந்துக்கள் அமைதியான முறையில் தங்களுடைய கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்யும் இந்த வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அட்டைப் படம் நன்றி: OpIndia