காவி துண்டு அணிந்ததற்காக இஸ்லாமிய மாணவர்களால் தாக்கப்பட்ட இளைஞர்! இவர்களை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கமாட்டாங்க!

Student attempts suicide after being assaulted for sporting saffron shawl

Update: 2022-02-15 14:28 GMT

கர்நாடக மாநிலம் மடிகேரி குஷால்நகரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்  ஒருவர், தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரஜ்வல் என அடையாளம் காணப்பட்ட மாணவர், காவி துண்டு அணிந்ததற்காக விடுதி மாணவர்கள் சிலரால் தாக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

செய்திகளின்படி, முஸ்லீம் மாணவர்கள் பிரஜ்வல்  காவி துண்டு அணிந்ததால்  கோபமடைந்தனர். சக முஸ்லிம் மாணவர்களின் தாக்குதலை பிரஜ்வல் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் எரிச்சலடைந்த அவர்கள் கடுமையாக பிரஜ்வாலை தாக்கினர். உடனடியாக இந்து அமைப்புகளின் தலைவர்களை உதவிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

கிடைத்த தகவலின்படி, விடுதி அதிகாரிகளிடம் இருந்து தனக்கு நீதி கிடைக்காததால் பிரஜ்வல் வருத்தமடைந்தார். இதனால் அவர் இந்து அமைப்புகளை நாடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நண்பர்கள் அவரை மீட்டு குசாலாநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஏற்கனவே விடுதி வார்டனுக்கு எதிராக மிரட்டல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இது தொடர்பாக குஷால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து போஸ்ட் ஊடகம் உள்ளூர் ஆதாரங்களை அணுகியது. அவர்கள் சம்பவத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தினர். பிரஜ்வல் உண்மையில் தற்கொலைக்கு முயன்றார் என்பது உறுதியானது. இருப்பினும், வழக்கின் மற்ற விவரங்கள் இன்னும் தெளிவாக இல்லை.

Tags:    

Similar News