சிறுபான்மை கல்வி உதவித்தொகை ரத்தா? மத்திய அமைச்சகம் முடிவு என்ன?

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை நிறுத்தப்படுகிறது.

Update: 2022-12-04 03:15 GMT

ஒன்று முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு குறிப்பாக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கான மத்திய அரசு கல்வி உதவித் தொகை தற்போது நிறுத்தப்படுகிறது. 9 மற்றும் பத்தாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த 2022-23 ஆம் ஆண்டிற்கான சிறுபான்மை அமைச்சகத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக சிறுபான்மை விவகார அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.


சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை செய்யப்படுகிறது என்று தேசிய உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு தெரிவிக்கிறது. இந்தியாவில் கல்வி உரிமம் சட்டம் 2009 இன் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்க கல்வி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வழங்குவதை அரசு கட்டாயமாக்கி இருக்கிறது எனவே இதன் காரணமாக பல்வேறு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு அவர்களை படிக்க ஊக்குவிக்கிறது.


அதன்படி, 9 மற்றும் 10 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பலன் பெறுவார்கள். சிறுபான்மையின பள்ளி மாணவர்களுக்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்காக அமைச்சகம் ரூ.1,425 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

Input & Image courtesy:Indian Express

Tags:    

Similar News