வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு சம்மன்.. பார்லி குழு முடிவு.!

வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு சம்மன்.. பார்லி குழு முடிவு.!

Update: 2021-01-13 18:41 GMT

சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் பற்றி வெளியான சர்ச்சைகள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். தனிநபரின் அனைத்து விஷயங்களும் சேகரிக்கப்படும் என்பதுதான் அந்த நிறுவனத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. இந்நிலையில், இது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவன அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க பார்லிமென்ட் குழு தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு திட்டமிட்டுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த வாரம் புதிய பிரைவசி கொள்கைகளை வெளியிட்டது. அதனை ஏற்றுக்கொண்டால் மட்டுமே வாட்ஸ்அப் செயலியை உபயோகிக்க முடியும் என கூறியது. புதிய பிரைவசி கொள்கையின் படி வாட்ஸ்அப் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்திற்கு வணிக நோக்கத்திற்காக உடனடியாக பகிரப்படும் என்பது அதன் முக்கிய அம்சமாகும். மேலும், உரையாடல்களையும் ஒட்டுக்கேட்குமோ என்ற அச்சம் எழுந்தது. உலகம் முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பலர் மாற்று செயலிகளுக்கு மாறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான பார்லி., தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு வரும் வாரங்களில் பேஸ்புக் அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்க உள்ளதாகவும், சம்மன் முறைப்படி அனுப்பப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 

Similar News