மற்ற நாடுகள் செய்யாததை இந்தியா செய்துள்ளது ! - மத்திய அரசை பாராட்டும் உச்சநீதிமன்றம்!

கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை உச்சநீதிமன்றம் வெகுவாக பாராட்டியுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

Update: 2021-09-24 03:40 GMT

கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை உச்சநீதிமன்றம் வெகுவாக பாராட்டியுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசுகள் 50 ஆயிரம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையர் பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உயிர்களை மீட்டு கொடுக்க முடியாது. இருந்தபோதிலும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கின்ற வகையில் இழப்பீடு அளிக்கப்பட உள்ளது என்றார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது, கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு சற்று நிம்மதியை கொடுக்கின்ற வகையில் இழப்பீடு வழங்கப்பட உள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இது பல்வேறு குடும்பத்தின் கண்ணீரை துடைக்கும். இந்தியா போன்ற மிகவும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இழப்பீடு வழங்குவது அவ்வளவு எளிதல்ல. இப்பிரச்சனையில் இந்தியா செய்துள்ளதை மற்ற நாடுகள் செய்யவில்லை. எனவே இதற்காக மத்திய அரசை நாங்கள் பாராட்டுகிறோம். மேலும் இழப்பீடு குறித்து அடுத்த மாதம் 4ம் தேதி சில வழிகாட்டுதல்களை கூறுவோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Source, Image Courteys: Dinamalar


Tags:    

Similar News