3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், யாரை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்..?

3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், யாரை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்

Update: 2021-10-04 13:17 GMT

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் இடைக்காலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், என்ன காரணத்திற்காக விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர் என உச்சநீதிமன்றம் சராமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

அடித்தட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதற்கு எதிராக டெல்லி எல்லையில் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சார்ந்த தொழில் முறை பெரு விவசாயிகள் கடந்த 10மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், என்ன மாற்றம் செய்யவேண்டும் என்ற கருத்தை முன்வைக்காமல் தொடர்ச்சியாக போராட்டத்தில் மட்டுமே குறியாக இருந்துள்ளனர். இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் சத்தியாகிரக போராட்டத்தை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கிசான் மகா பஞ்சாயத் என்ற விவசாய அமைப்பு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து வேளாண் சட்டங்களும் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அப்படி இருக்கும் போது, விவசாயிகள் யாரை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள் ? எதற்காக விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராடுகிறார்கள்? இதெல்லாம்  எங்களுக்கு புரியவில்லை.

போராட்டம் நடத்த ஜந்தர் மந்தரை குறிப்பிட்டு மனுதாரர் கேட்கும் நோக்கம் என்னவென்பது எங்களுக்கு தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது விவசாயிகள் தங்களது போராட்டங்களை தொடரலாமா? நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னர் போராட்டம் நடத்துவதற்கான அவசியம் இல்லை என விவசாயிகள் தரப்புக்கு காட்டமாக கேள்வியெழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர். 


Tags:    

Similar News