உத்தரகண்ட் மாநிலத்துக்கு தமிழக அரசு உதவத் தயார்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
உத்தரகண்ட் மாநிலத்துக்கு தமிழக அரசு உதவத் தயார்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!;
உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கலை தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பனிப்பாறை கடந்த ஞாயிற்றுக்கிழமை உடைந்து சரிந்தது. இதில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்டவர்களின் நிலை இன்னும் தெரியவில்லை. இதுவரை 25க்கும் மேற்பட்வர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப்படை ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், உத்தரகண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தழிழ்நாடு அரசு தயாரக உள்ளது என்று அம்மாநில முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.