ஈரோடு, பழனி ரயில் திட்டத்துக்கு தி.மு.க. அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை: மத்திய அரசு குற்றச்சாட்டு!
ஈரோடு, தாராபுரம், பழனி இடையிலான ரயில் பாதை திட்டத்துக்கு திமுக அரசு போதுமான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
மாநிலங்களவை எம்.பி., வைகோ எழுத்துப்பூர்வமான எழுப்பிய கேள்விக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார். அப்போது அவர் பேசும்போது, 1997ம் ஆண்டின் பட்ஜெட்டில் இடம் பிடித்த பெங்களூரு, சத்தியமங்கலம் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வுக்கு தமிழக அரசும், மத்தியக்குழுவும் அனுமதிக்கவில்லை என்றும், அதன் காரணமாகவே திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை எனக் குறிப்பிட்டார்.
அதே போன்று ஈரோடு, தாராபுரம், பழனி இடையில் சுமார் 91 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கின்ற திட்டம் அறிவிக்கப்பட்டு, 1,149 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டதாக அமைச்சர் கூறினார். மேலும், திட்டத்தின் செலவு அதிகமாகும் என்பதால் தேவையான நிலத்தை இலவசமாக வழங்கவும், 50 சதவீத தொகையை வழங்க மத்திய அரசு கோரியிருந்தது. இதனை திமுக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று ரயில்வே அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Source, Image Courtesy: Puthiythalaimurai